யார் நாய், யார் சிங்கம் என்பது தேர்தல் நாளில் தெரியவரும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன தெரிவித்தார்.
கல்லில் அடிபட்டால், நாய் ஓடுகிறது, சிங்கம் அதை சவாலாக எடுத்து எதிர்த்து நிற்கின்றது என, முன்னாள் எம்.பியான பசில் ராஜபக்ஷ தெரிவித்திருந்தார். இது மக்களுக்கு அச்சுறுத்தல் விடுப்பதாக அமைந்துள்து என்றும் சஜின் வாஸ் தெரிவித்தார்.
கொழும்பு சுகததாஸ உள்ளக அரங்கில், வௌ்ளிக்கிழமை நடைபெற்ற ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய மாநாட்டில் வைத்தே, பசில் ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இலங்கை மக்கள் இன, மத பேதமின்றி யாருடைய அச்சுறுத்தல்களுக்கும் அடிபணியும் தேசம் அல்ல. எனவே, தேர்தல் நாளில் யார் நாய், யார் சிங்கம் என்று பார்க்கலாம் என்றும் சஜின் வாஸ் குணவர்தன சவால் விட்டார்.
2001ஆம் ஆண்டு இந்தியாவில் உள்ள ஜோதிடரிடம் மஹிந்த ராஜபக்சவின் ஜாதகத்தைப் பார்க்கச் சென்றேன். வேண்டுமானால் மஹிந்த ராஜபக்ஷவிடம் கேட்கலாம். அவர் ஜாதகத்தைப் பார்த்துவிட்டு, உங்கள் குடும்பத்திலிருந்து ஒரு ராஜபக்ச வந்து ஒட்டுமொத்த தலைமுறையின் நற்பெயரை அழித்துவிடுவார் என்றார். அது கோட்டாபய ராஜபக்ச பற்றி அல்ல. பசில் ராஜபக்ச பற்றியது என்றும் சஜின் வாஸ் குணவர்தன தெரிவித்தார்.