ஹமாஸ் தரப்பினர் முழுமையாக அழிக்கப்படும் வரையில் காசாவில் போர் தொடரும் என இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
வடக்கு காசாவில் உள்ள இஸ்ரேலிய துருப்புக்களை சந்தித்த பின்னர் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
போர் இன்னும் வெகு தொலைவில் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபை உட்பட உலக நாடுகள் போர் நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில் இஸ்ரேலிய பிரதமரின் இந்த கருத்து வெளியாகியுள்ளது.
இராணுவ அழுத்தத்தை பிரயோகிக்காமல் ஹமாஸ் தரப்பினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள பணயக் கைதிகளை விடுவிக்க முடியாது எனவும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார்.