கொழும்பு தேசிய வைத்தியசாலை இளம் தாதி திடீர் உயிரிழப்பு; சோகத்தில் குடும்பம்

tubetamil
0

  கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பணிபுரியும் இளம் தாதி ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.

குறித்த தாதி மருத்துவமனையில் இருந்து பண்டாரவளையிலுள்ள தனது வீட்டுக்குத் திரும்பிய நிலையில் திடீரென சுகவீனமடைந்து உயிரிழந்துள்ளதாக பண்டாரவளை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.


சேவையில் இணைந்து ஒரு மாதத்தில் மரணம்

புதிதாக சேவையில் இணைந்து கொண்ட தாதி உத்தியோகத்தர் ஒருவரே இவ்வாறு நேற்றையதினம் செவ்வாய்க்கிழமை (26) உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் பண்டாரவளை மகுல்லல்லேல பகுதியைச் சேர்ந்த சந்துனி சுலோச்சனா என்ற 24   வயதுடைய புதிய தாதியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்த தாதி   கடந்த ஒரு மாதத்துக்கு முன்னரே சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டவர் என கூறப்படும் நிலையில் அவரது மரணம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top