ஜனாதிபதியின் யாழ் விஜயம்: கடற்றொழிலாளர் கூட்டுறவுச்சங்க பிரதிநிதி விடுத்துள்ள கோரிக்கை

keerthi
0

 


ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளும்போது கடற்றொழிலாளர் பிரதிநிதிகளை அழைத்து பேச வேண்டும் என மயிலிட்டி கடற்றொழிலாளர் கூட்டுறவுச்சங்க பிரதிநிதி சிவஞானராஜா மகேஸ் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று(29.12.2023) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

“ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அடுத்த வாரம் வடக்கு மாகாணத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளார்.

இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறிய இழுவைமடிப் பிரச்சினைக்கு யாரும் தீர்வு தருவதாக இல்லை.

  அத்தோடு   கடற்படையும் அதிகளவான படகுகளை பிடிப்பது கிடையாது. ஆகவே ஜனாதிபதி எமது பிரதிநிதிகளை சந்தித்து ஒரு தீர்வை எட்ட வழிசெய்ய வேண்டும்” என தெரிவித்துள்ளார். 



Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top