எரிவாயு, பெற்றோல் மற்றும் டீசல் விலைகளில் ஏற்படும் மாற்றம் தொடர்பில் ஜனாதிபதி ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் விளக்கமளிக்கப்பட்டது.
எரிபொருள் மற்றும் எரிவாயு மீதான VAT வரியை நடைமுறைப்படுத்துவதற்கு முன், துறைமுகம் மற்றும் விமான நிலைய வரி நீக்கப்படும் என நிதியமைச்சின் வரி கொள்கை ஆலோசகர் திருமதி தனுஜா பெரேரா தெரிவித்தார்.
அதன்படி, எரிபொருளுக்கான 18 சதவீத VAT வரியை அமல்படுத்தும்போது, 7.5 சதவீத துறைமுகம் மற்றும் விமான நிலைய வரி நீக்கப்படும் எனவும் திருமதி தனுஜா பெரேரா தெரிவித்தார்.
அத்தோடு, எரிவாயுவுக்கான 18 சதவீத VAT வரியை அமல்படுத்தும்போது, 2.5 சதவீத துறைமுகம் மற்றும் விமான நிலைய வரி நீக்கப்படும் எனவும் திருமதி தனுஜா பெரேரா தெரிவித்தார்.