வெளியாகியுள்ள 2022(2023) உயர்தரப் பரீட்சையின் மீள் ஆய்வு முடிவுகளின்படி, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு 2022(2023) கல்வியாண்டுக்கான பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பங்களை கோரியுள்ளது.
அத்தோடு, தகுதியுடைய புதிய விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களை இன்று (22) முதல் 29 ஆம் திகதி வரை இணையம் மூலம் சமர்பிக்க முடியுமெனவும் அறிவித்துள்ளது.
அதன்படி, அந்த விண்ணப்பதாரர்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.ugc.ac.lk க்குச் சென்று விண்ணப்பங்களை முறையாகப் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், பல்கலைக்கழகங்கள், வளாகங்கள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களால் நடத்தப்படும் திறன் தேர்வுகளின் தற்போதைய கற்கைநெறிகளுக்கு விண்ணப்பிக்க இந்த வாய்ப்பு பொருந்தாது எனவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.