நடிகரும், தேமுதிக தலைவருமான கேப்டன் விஜயகாந்த் இன்று காலை காலமானார். இவருடைய மறைவு தமிழக மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
நடிகர் விஜயகாந்தின் உடல் தற்போது கோயம்பேடு தேமுதிக அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள நிலையில், நாளை அங்கே அவருடைய உடல் அடக்கம் செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.நடிகர் விஜயகாந்த் பலருக்கும் அள்ளிக்கொடுத்த கர்ணன் ஆவார். இதை திரையுலகில் உள்ள பலரும் கூறி நாம் கேள்விப்பட்டு இருக்கிறோம்.
அதே போல் இவரைபோல் சாப்பாடு போட்டு வயிறையும், மனசையும் யாராலும் நிரப்பவே முடியாது என்றும் கூறுவார்கள்இப்படி பலருக்கும் அள்ளிக்கொடுத்த நடிகர் விஜயகாந்தின் முழு சொத்து மதிப்பு மட்டுமே ரூ. 53 கோடி இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் விஜயகாந்தின் வீட்டின் விலை மற்றும் ரூ. 1 கோடி இருக்கும் என்கின்றனர்.