உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கை மேற்கொண்டுள்ள ரஷியா, சமீபகாலமாக தீவிரமாக வான் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. அத்தோடு பெரும்பாலான ஏவுகணைகள் உக்ரைன் பகுதியை தாக்குவதால் அதிக அளவில் சேதம் ஏற்படுகிறது. மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் உக்ரைன் படைகள் ரஷியாவுக்கு பதிலடி கொடுத்து வருகின்றன.
எனினும் இதற்கிடையே, உக்ரைன் மீது மிகப்பெரிய வான்வழி தாக்குதலை ரஷியா நடத்தியிருக்கிறது. நேற்று முன்தினம் பகலில் தொடங்கி இரவு வரை நீடித்த இந்த தாக்குதலின்போது 122 ஏவுகணைகள் மற்றும் 36 டிரோன்கள் ஏவப்பட்டன. இதில் பொதுமக்கள் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். கீவ் உள்பட 6 நகரங்களைக் குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது என உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், நாங்கள் விளாடிமிர் புதினை வெற்றி பெற விடமாட்டோம். உக்ரைனுடன் நாங்கள் தொடர்ந்து நிற்போம் என தெரிவித்தார்.