கொழும்பில் இன்று (31) விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு இன்று கொழும்பு நகரில் ஏற்படக்கூடிய வாகன நெரிசலை கட்டுப்படுத்தும் நோக்கில் மாலை 5 மணி முதல் இந்த போக்குவரத்து திட்டம் காலிமுகத்திடல் உள்ளிட்ட பகுதிகளில் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.