நடிகர் விஜயகாந்த் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இந்தநிலையில், அவர் கடந்த மாதம் 18ஆம் திகதி உடல்நலக்குறைவு காரணமாக நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
விஜயகாந்துக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு தொடர் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது.
இதையடுத்து, விஜயகாந்த் சிகிச்சை நிறைவடைந்து வீடு திரும்பியதாக மருத்துவமனை சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் விஜயகாந்த் பூரண குணமடைந்து இன்று வீடு திரும்பியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.