காலமானார் விஜயகாந்த்: கண்ணீரில் தமிழகம்

tubetamil
0

 தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.

நடிகர் விஜயகாந்

கேப்டன் விஜயகாந்த் என பரவலாக அறியப்படும் விஜயராஜ் அழகர்சாமி எனும் விஜயகாந்த், இந்திய அரசியல்வாதி மற்றும் திரைப்பட நடிகர்.


இவர் 2011-16 காலகட்டத்தில், தமிழக சட்டமன்றத்தின் எதிர்கட்சித் தலைவராக இருந்தார். அரசியலில் நுழைவதற்கு முன்பாக, தமிழ் திரையுலகின் பிரபல நடிகராக இருந்தார்.

தேமுதிக நிறுவனா்

தேமுதிக நிறுவனா் விஜயகாந்த் உடல்நல குறைவு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.


மருத்துவ பரிசோதனையில் அவருக்கு கொரோனோ தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. 

மேலும் மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் அவருக்கு வென்டிலேட்டர் சிகிச்சை தரப்படுவதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி  உயிரிழந்த தகவல் வெளியாகி தமிழக மக்களையும் திரையுலகத்தையும் கடும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.



Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top