அவுஸ்திரேலியாவின் அதிகூடிய சம்பளம் பெறும் இலங்கை வம்சாவளி பெண்

keerthi
0

 


இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த ஷெமாரா விக்கிரமநாயக்க என்ற பெண், மூன்றாவது முறையாக அவுஸ்திரேலியாவின் அதிகூடிய சம்பளம் பெறும் பிரதம நிறைவேற்று அதிகாரியாகியுள்ளார்.

மேலும்   இந்த ஆண்டு, அவர் Macquarie குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக 32.8 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்கள் (சுமார் 70 கோடி இலங்கை ரூபாய்) வருடாந்த சம்பளமாக பெற்றுள்ளார்.

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், ஷெமாரா விக்கிரமநாயக்கவின் சம்பளம் இந்த வருடம் 30 வீதத்தால் வளர்ச்சியடைந்துள்ளது.

அத்தோடு     இவர் இங்கிலாந்தில் 1962 இல் பிறந்துள்ளதுடன், 2018 ஆம் ஆண்டு குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக ஷெமாரா விக்ரமநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

Macquarie Group என்பது அவுஸ்திரேலியாவை தளமாகக் கொண்ட நிதி நிறுவனம் என்பதுடன், இந்த பதவியை வகித்த முதல் பெண்மணி ஷெமாரா விக்கிரமநாயக்க என்பதும் குறிப்பிடத்தக்கது.



Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top