திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரை சேர்ந்தவர் தமிழருவி. இவர் வாணியம்பாடி பஸ் நிலையத்தில் பேக்கரி கடை நடத்தி வருகிறார். வழக்கம்போல் கடையை திறந்து வியாபாரம் செய்து வந்தனர்.
இவ்வாறுஇருக்கையில் நேற்று இரவு பேக்கரியில் ஒரு ஊழியர் மற்றும் வேலை செய்து கொண்டிருந்தார்.
அப்போது 3 பேர் கொண்ட கும்பல் பைக்கில் வந்தனர். திடீரென மது பாட்டில்களில் பெட்ரோலை நிரப்பி, அதனை பற்ற வைத்து பேக்கரியில் வீசினர். அதில் ஒரு பாட்டில் மட்டும் வெடித்து சிதறியது. இதில் கடையில் தீ பிடித்து எரிந்தது. கடையில் இருந்த பொருட்கள் தீயில் கருகியது. மேலும் தீ மளமளவென தீப்பிடித்து எரிய தொடங்கியது.
இதனை கண்ட ஊழியர் அதிர்ச்சி அடைந்து தீயை அணைக்க முயன்றார். அப்போது அவருக்கு லேசான தீக்காயம் ஏற்பட்டது. மர்ம கும்பல் கடைக்குள் புகுந்து ஊழியரை மிரட்டி தாக்க முயன்றனர். அவர் கூச்சலிடவே அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். சுதாரித்து கொண்ட மர்ம கும்பல் அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் அங்கிருந்து பைக்கில் தப்பி சென்றனர்.
எனினும் இது குறித்து அப்பகுதி மக்கள் வாணியம்பாடி டவுன் போலீசாருக்கும் மற்றும் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் கடையில் மேலும் தீ பிடிக்காமல் இருக்க தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
அத்தோடு அங்கு வெடிக்காமல் இருந்த மீதமுள்ள 2 பெட்ரோல் குண்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து பெட்ரோல் குண்டு வீசி, ஊழியரை மிரட்டி சென்ற மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.