இலங்கையில் பெண்களை திருமணம் செய்வதாக ஏமாற்றிய மோசடியாளர்கள்..!!

tubetamil
0

 இலங்கையில் பெண்களை திருமணம் செய்வதாக கூறி பாரிய நிதி மோசடியில் ஈடுபட்ட வெளிநாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மருத்துவர் போல் நடித்து, மூன்று பெண்களை ஏமாற்றி, திருமணம் செய்து தருவதாக கூறி, பல லட்சம் ரூபாய் மோசடி செய்த நைஜீரிய நாட்டவர்கள் கணினி குற்றப்பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அளுத்கமவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த போதே இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சமூக ஊடகங்கள்

இந்த இரண்டு சந்தேக நபர்களும் மருத்துவர்கள் போல் நடித்து சமூக ஊடகங்கள் மூலம் அடையாளம் காணப்பட்ட இரண்டு பெண்களை திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்துள்ளார்.


மற்றொரு பெண்ணுக்கு கார் வென்றதாகவும் காரின் ஆவணங்களை ஒப்படைக்க விரும்புவதாகவும் கூறி ஏமாற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ATM அட்டைகள்

மூன்று முறை இந்த மோசடி நடந்துள்ளது. இது தொடர்பில் பெண்கள் செய்த முறைப்பாடுகளின் அடிப்படையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்படும் போது, ​​சந்தேகநபர்களிடம் 14 ஏடிஎம் அட்டைகள் மற்றும் 6 கையடக்கத் தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளது.


Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top