இலங்கையில் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தி சிறிலங்காவின் முன்னாள் அதிபரான கோட்டாபய ராஜபக்சவை, அவரது சகோதரரும் பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகருமான பசில் ராஜபக்ச விரட்டியடித்ததாக தாய்நாட்டு மக்கள் கட்சியின் தலைவர் திலித் ஜயவீர குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த சதியின் பின்னணியில், சிறிலங்காவின் அடுத்த அதிபராக பொறுப்பேற்கும் திட்டம் பசில் ராஜபக்சவுக்கு இருந்ததாக கொழும்பு ஊடகமொன்றுக்கு வழங்கிய விசேட நேர்காணலின் போது திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.
அதாவது தேசியவாத அரசியலை தாம் 30 வருட காலமாக முன்னெடுப்பதாக தாய்நாட்டு மக்கள் கட்சியின் தலைவர் திலித் ஜயவீர குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, தேசியவாதம் என்பது இலங்கை மாத்திரமின்றி அனைத்து நாடுகளாலும் பின்பற்றப்பட வேண்டிய ஒரு விடயமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் தற்போதைய நெருக்கடி நிலையிலிருந்து தேசியவாதம் அத்தியாசவமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சிறிலங்காவின் முன்னாள் அதிபரான கோட்டாபய ராஜபக்ச தேசியவாதம் என்றால் என்ன என்பதை ஓரளவு அறிந்திருந்ததாக திலித் ஜயவீர கூறியுள்ளார்.
எனினும், அவர் சிறிலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் தீர்மானங்களை மேற்கொண்டு தமது நடவடிக்கைகளை முன்னெடுத்தாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த பின்னணியில், சிறீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரான பசில் ராஜபக்சவின் கருத்துக்களுக்கமைய கோட்டாபய ராஜபக்ச செயல்பட்டதாக திலித் ஜயவீர சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும் இதன்படி, கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சி காலத்தில் தேசியவாதத்தை எதிர்க்கும் பசில் ராஜபக்ச மறைமுகமாக இலங்கையை ஆட்சி செய்யததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறுஇருக்கையில், பசில் ராஜபக்சவின் ஆதிக்கம் காரணமாக கோட்டபய ராஜபக்சவின அரசியல் பயணம் நிறைவுக்கு வந்தததாக அவர் தெரிவித்துள்ளார்.