பொரலந்தை முதல் ஹோர்ட்டன் சமவெளி வரையான ஒஹிய பகுதியில் மேற்கொள்ளப்படும் அனுமதியற்ற நிர்மாணங்களை உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு ஜ
னாதிபதி ரணில் விக்ரமசிங்க, அதனுடன் தொடர்புடைய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
பதுளை மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
ஒஹிய பகுதியில் இவ்வாறான நிர்மாணங்கள் இடம்பெறுவதால், அவற்றினால் பாரிய சுற்றாடல் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலைமையை உடனடியாக தடுக்காவிடின் எதிர்காலத்தில் பாரிய பிரச்சினைக்கு முகம் கொடுக்க நேரிடும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.