மர்மமான முறையில் உயிரிழந்த மத்ரஸா பாடசாலை மாணவனின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களுக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு மரணம் தொடர்பில் கைதான அப்பாடசாலையின் மேற்பார்வையாளரையும், மௌலவியையும் எதிர்வரும் ஜனவரி மாதம் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சிறுவர் நன்னடத்தை பாடசாலையில் தங்க வைக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த சிறுவனின் மரணத்துடன் அப்பாடசாலையின் மேற்பார்வையாளரான பெண் மற்றும் மத்ரஸா நிர்வாகியாகிய மௌலவி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இவ்வாறுஇருக்கையில், நேற்று (21.12.2023) மீண்டும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையில் கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம் சம்சுதீனால் இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.