யாழ்ப்பாணம் - பெரிய கடை வீதியில் அமைந்துள்ள இரண்டு வர்த்தக நிலையங்கள் தீக்கிரையாகியுள்ளன.
இத் தீ விபத்து சம்பவம் நேற்று (27.12.2023) இரவு இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
தீயணைப்பு பிரிவினரின் நடவடிக்கை
தீவிபத்தில் கடையில் இருந்த பெரும்பாலான பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளன.
இந்நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த யாழ். மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினர் தீப்பரவலை கட்டுப்பாடுக்குள் கொண்டுவந்துள்ளனர்.
மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.