இலங்கையில் பெருந்தோட்ட தொழில்துறையை நிறுவிய இந்திய வம்வாவளி தமிழர்களின் உழைப்பை அங்கீகரிக்கும் வகையில் இந்தியாவின் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் ஜே.பி.நட்டா நினைவு அஞ்சல் முத்திரையை வெளியிடவுள்ளார்.
இந்தியாவின் புதுடெல்லியில் இதற்கான நிகழ்வு இன்று இடம்பெறவுள்ளது.
இலங்கையின் சார்பில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் குறித்த முத்திரையை பெற்றுக் கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை இந்தியாவின் 'நாகரிக இரட்டையர்' என இந்திய பிரதமர் நரேந்திர மோடி நம்புவதாக பாரதீய ஜனதா கட்சியின் தமிழக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாகவே இலங்கைக்கு இந்தியா பல்வேறு கட்டங்களிலும் உதவிகளை செய்து வருகிறது.
இந்தநிலையில், 200 ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கையில் தோட்டத் தொழில் மற்றும் பிற உட்கட்டமைப்பை நிறுவுவதில் இந்திய வம்சாவளி தமிழர்களின் 'உழைப்பை' அங்கீகரிக்கும் வகையில் இன்று அஞ்சல் வெளியிடப்படுவதாகவும் பாரதீய ஜனதா கட்சியின் தமிழக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.