ஜனவரியில் குறைக்கப்படவுள்ள மின் கட்டணம்

keerthi
0

 



நீர் மின்சாரத்தில் இருந்து போதிய அளவு மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதால் மக்களுக்கு மின் கட்டணத்தில் நிவாரணம் வழங்க முடியும் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

2024 ஜனவரி நடுப்பகுதியில் மீண்டும் கட்டணத் திருத்தத்தை மேற்கொள்ள எதிர்ப்பார்த்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், 

கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது தற்போது ஒவ்வொரு நாளும் மழையின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் அதிக அளவில் நீர் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

அடுத்த மின் கட்டண திருத்தம் ஏப்ரல் மாதம் தான் முன்மொழியப்பட்டிருந்தது. இந்த கணிப்புகள் மாறிவிட்டதால் இதன் நன்மையை நுகர்வோருக்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

எனினும் நான் அவசரப்பட மாட்டேன். இது தொடர்பான தரவு மற்றும் அந்தத் தகவல்களை மின்சார சபையும் அதிகாரிகளுமே வழங்க வேண்டும்.

அதன்படி, டிசம்பர் 31 ஆம் திகதி எங்களின் இருப்புநிலை அறிக்கை முடிந்த பிறகு, ஜனவரி நடுப்பகுதியில் மீண்டும் கட்டணத் திருத்தத்தை மேற்கொள்ள எதிர்ப்பார்த்துள்ளோம்.

 எனினும்  தற்போதைய நிலைமைக்கு அமைய கட்டணம் குறைய வாய்ப்புள்ளது என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.




Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top