ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக குற்றப் பிரேரணை ஒன்றை கொண்டு வரக்கூடிய சாத்தியம் உண்டு என நாடாளுமன்ற உறுப்பினர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியள்ளார்.
ஜனாதிபதி எதேச்சாதிகாரமாக அரசியல் அமைப்புச் சபையின் நடவடிக்கைகளில் தலையீடு செய்வதாகவும், இதன் மூலம் அரசியல் அமைப்பு மீறப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
“ஜனாதிபதியின் ஆட்சிப் போக்கிற்கு எதிராக எதிர்க்கட்சிகள் அணிதிரள்கின்றனர்.
அத்தோடு எதிர்வரும் 2024ம் ஆண்டு தேர்தல் ஆண்டாக கருதப்படுகிறது.
இந்நிலையில், ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்கள் நடத்தப்பட உள்ளது.
தேர்தல் காலங்களில் அரசியல் அமைப்புச் சபை சுயாதீனமாக செயற்பட வேண்டியது அவசியமானது.
அத்தோடு, தேர்தல் ஆணைக்குழுவின் வெற்றிடங்கள் நிரப்பப்படாமைக்கு தேர்தல் மோசடிகளில் ஈடுபடும் நோக்கம் காரணமா என்ற சந்தேகம் எழுகிறது.
சர்வதேச பிரகடனங்களை மீறிச் செயற்பட்டால் இலங்கைக்கு கிடைக்கும் ஜீ.எஸ்.பி பிளஸ் சலுகை கிடைக்காது போகும் சாத்தியம் உண்டு.
அத்தோடு பயங்கரவாத தடைச்சட்டம் நடைமுறைப்டுத்தப்படுவதனால் சர்வதேசம் அதிருப்தி கொண்டுள்ளது.
இதன்படி தேர்தல் காலங்களில் ஜனநாயகத்தை நிலைநாட்டும் வகையில் செயற்பட வேண்டியது அவசியமானது'' என்றார்.