விஜயகாந்த், கேப்டன், கேப்டன் என தமிழ்நாடே கண்ணீரில் மிதந்து வருகிறது.
நேற்று டிசம்பர் 28, காலை 6.10 மணியளவில் சிகிச்சை பலன் இன்றி விஜயகாந்த் உயிரிழந்தார். சாலிகிராமம், தேமுதிக அலுவலகம் இப்போது தீவுத் திடலில் விஜயகாந்த் உடல் வைக்கப்பட்டுள்ளது.மாலை 4.45 மணியளவில் விஜயகாந்த் உடல் தேமுதிக அலுவலகத்தில் அடக்கம் செய்யப்பட இருக்கின்றனர்.
நேற்று மாலையே விஜய் வந்து அஞ்சலி செலுத்திய நிலையில் இன்று காலை ரஜினிகாந்த், கமல்ஹாசன் என சினிமாவில் இருக்கும் பிரபலங்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.நடிகர்
விஜய், விஜயகாந்திற்கு அஞ்சலி செலுத்த வந்தது கேள்விப்பட்ட தொண்டர்கள் சிலர் அவர் உயிருடன் இருக்கும் போது ஒரு நாளும் பார்க்கவில்லை என கோபமாக கேள்வி கேட்கின்றனர்.
ஆனால் உண்மை என்னவென்றால் நடிகர் விஜய், விஜயகாந்தை சந்திக்க கடந்த 1 வருடதாக அவரது குடும்பத்தினரிடம் அனுமதி கேட்டு வருகிறாராம். ஆனால் விஜயகாந்த் குடும்பத்தினர் தான் மவுனம் காத்து வந்துள்ளனர்.