உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தும் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கிய உலக பணக்காரரும், டெஸ்லா நிறுவன தலைமை செயல் அதிகாரியுமா எலான் மஸ்க், அதை 'எக்ஸ்' என்று பெயர் மாற்றினார்.
எக்ஸ் தளத்தை உலக தலைவர்கள் முதல் ஏராளமானோர் பின்தொடர்ந்து வருகின்றனர். இவ்வாறுஇருக்கையில், உலகம் முழுவதும் இன்று காலை முதல் எக்ஸ் சமூக வலைத்தளம் செயலிழந்தது. இதனால் பயனாளர்கள் அவதியடைந்து வந்தனர்.
அத்தோடு எக்ஸ் தளத்தின் உள்ளே பயனாளர்களுக்கு பக்கங்கள் காண்பித்தாலும், அதில் யாருடைய பதிவுகளும் காட்டப்படவில்லை. பின்தொடர்தல் (Follow), உங்களுக்காக (For you) உள்பட அனைத்து தாவல்களும் தகவல்கள் இல்லாமல் காலியாக இருந்தன. பயனர்கள் தங்களின் பதிவுகளை உருவாக்கலாம் பதிவிடலாம். ஆனால், அந்த பதிவுகள் யாரும் பார்க்க முடியாத நிலையில் இருந்தது. சிக்கல் வெளிவந்த சில நிமிடங்களில் #XDown டிரெண்டானது.
இந்நிலையில், எக்ஸ் தளம் தற்போது செயல்பட தொடங்கியுள்ளது.