பிரதமர் நரேந்திர மோடி கேரளா வருகை

keerthi
0

 


பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் மகளிர் இடஒதுக்கீடு மசோதா கடந்த செப்டம்பர் மாதம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து பாரதிய ஜனதா கட்சி சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.


ரேளாவில் அம்மாநில பாரதிய ஜனதா கட்சி சார்பில் 2 லட்சம் பெண்கள் பங்கேற்கும் பிரமாண்ட கூட்டம் நடத்தப்படுகிறது. திருச்சூர் தேக்கிங்காடு மைதானத்தில் அடுத்த மாதம் (ஜனவரி) 2-ந்தேதி இந்த கூட்டம் நடத்தப்படுகிறது.


ஸ்ரீ சக்தி சங்கமம் என்ற தலைப்பில் நடத்தப்படும் இந்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேசுகிறார். இது தொடர்பாக கேரள மாநில பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் சுரேந்திரன்  தெரிவித்ததாவது...




பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை வெற்றிகரமாக நிறைவேற்றியதற்காக பிரதமர் மோடியை வாழ்த்துவதற்காக ஸ்ரீ சக்தி சங்கமம் என்ற கூட்டம் திருச்சூரில் ஜனவரி 2-ந்தேதி நடத்தப்படுகிறது. இதில் 2 லட்சம் பெண்கள் பங்கேற்கிறார்கள்.


அங்கன்வாடி பணியாளர்கள் தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்கள் தொழில் முனைவோர் சமூக மற்றும் கலாச்சார ஆர்வலர்கள் கலந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேசுகிறார்.


தென்மாநிலத்தில் எந்த ஒரு அரசியல் கட்சியும் இவ்வளவு பெரிய பெண்கள் கூட்டத்தை ஏற்பாடு செய்ததில்லை. இந்த நிகழ்ச்சி மாநில அளவில் மட்டுமின்றி தேசிய அளவிலும் முதல் நிகழ்வாக இருக்கும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.


அத்தோடு பிரதமர் நரேந்திர மோடி கேரளா வருவதை முன்னிட்டு அம்மாநில பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். மேலும் பிரதமரை வரவேற்க தயாராகி வருகின்றனர்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top