வருடாந்த பிறப்பு வீதத்தில் கடும் சரிவு; வெளியானது தகவல்..!

keerthi
0


இலங்கையின் வருடாந்த பிறப்பு வீதத்தில் சரிவு ஏற்பட்டுள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

எனினும்   குறிப்பாக 2019 மற்றும் 2022 க்கு இடையில் இந்த  கணக்கெடுப்பில் கடும் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

2023 மற்றும் 2022 க்கு இடையில் 6,401 பதிவு செய்யப்பட்ட பிறப்புகளின் வீழ்ச்சியுடன், 2014 முதல் தொடர்ச்சியான சரிவையும் தரவு வெளிப்படுத்தியுள்ளது.

ஜூலை 1, 2023 நிலவரப்படி, 268,920 பிறப்புகள் பதிவாகியுள்ளன. 2022 இல் 275,321 மற்றும் 2020 இல் 300,000 க்கும் அதிகமான பிறப்புகள் பதிவாகியுள்ளன.

 அத்தோடு   சமூக மற்றும் பொருளாதாரநெருக்கடிகள், பிறப்பு கட்டுப்பாடு திட்டங்கள், குடும்பக் கட்டுப்பாடு மற்றும் உலகளாவிய தொற்றுநோய்களின் தாக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணிகள் இந்த சரிவுக்கு காரணம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top