ஊழல் மோசடிகளினால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
கட்டான ஹல்பே புனித பிரான்சிஸ் தேவாலயத்தில் நடைபெற்ற நத்தார் ஆராதணைகளில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அத்தோடு ஊழல் மோசடிகளினால் நாட்டு மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்னர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையில் பட்டினியால் வாடும் குடும்பங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள மக்கள் தற்பொழுது வரிச் சுமையினாலும் பாதிக்கப்பட்டுள்ளனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, நத்தார் பண்டிகையை முன்னிட்டு வானவேடிக்கை உள்ளிட்ட பாட்டாசுகள் மிகக் குறைந்தளவில் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.