இந்தியாவிலிருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட போதை மாத்திரைகளுடன் இருவர் மன்னார் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் மன்னாரில் இன்று (20.12.2023) காலை இடம்பெற்றுள்ளது.
பொலிஸாரிடம் ஒப்படைப்பு
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 18 ஆயிரம் போதை மாத்திரைககள் கைப்பற்றப்பட்டதுடன் அவற்றின் பெறுமதி 21 இலட்சம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்
குறித்த சம்பவதில் கைது செய்யப்பட்டவர்களும் கைபப்பற்றப்பட்ட போதை மாத்திரைகளும் மன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.