மயிலத்தமடு தமிழர்களுக்கு முட்டுக்கட்டையாக உள்ள அம்பிட்டிய தேரர் என்ற இனவாத பிக்கு உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என சமூக செயற்பாட்டாளர் ரஜீவ் காந்த் தெரிவித்துள்ளார்.
வடக்கு - தெற்கு ஒருங்கமைப்பினால் இன்று (22.12.2023) ஏற்பாடு செய்யப்பட்ட ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் இது தொடர்பாக அவர் கூறுகையில்,
நூறாவது நாளாக தொடரும் மயிலத்தமடு விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் நோக்கில் வடக்கு - தெற்கு ஒருங்கமைப்பினால் இந்த ஊடக சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அத்தோடு அம்பிட்டிய சுமணரத்ன தேரர் என்ற இனவாத பிக்கு ஒருவரால் தொடர்ச்சியாக மயிலத்தமடு விவசாயிகள் அச்சுறுத்தப்பட்டு வருகிறார்கள். அவரின் இனவாத கருத்துக்களுக்கு எதிராக நாங்கள் முறைப்பாடு செய்தும் அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை.
மயிலத்தமடு மேய்ச்சல் நிலத்திற்காக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு பெரும் முட்டுக்கட்டையாக திகழும் இந்த இனவாத தேரர் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும்” எனவும் தெரிவித்தார்.