இயக்குனர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படத்தில் விஜய் நடிக்கின்றார்.
குறித்த திரைப்படத்திற்கு தற்காலிகமாக தளபதி 68 என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த திரைப்படத்தில் யோகிபாபு, பிரசாந், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஸ், அஜ்மல் அமீர், வைபவ், பிரேம்ஜீ , சினேகா, லைலா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர்.
கல்பாத்தி எஸ் அகோரம் தயாரிக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கின்றார்.
இந்த திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் அண்மையில் இடம்பெற்றது.
தற்போது, புதுவருடத்தை முன்னிட்டு படக்குழு படப்பிடிப்பு நடவடிக்கைகளை ஒத்திவைத்துள்ளது.
இந்தநிலையில், தளபதி - 68 படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு இலங்கையில் இடம்பெறவுள்ளதாக இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.