வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறைக் கைதி மரணம்

keerthi
0

 


காய்ச்சல் காரணமாக மாத்தறை சிறைச்சாலையில் இருந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கைதிகளுள் ஒருவர் மரணமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஏனைய 8 பேரும், மரணமானவர் கொண்டிருந்த நோய்க்குணங்குறிகளையே கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தநிலையில் குறித்த குணங்குறிகளைக் கொண்டு, இது மூளைக்காய்ச்சலாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாக மருத்துவமனை தரப்புக்கள் தெரிவித்துள்ளன.

முன்னதாக சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, சிறை அதிகாரிகள், சிறைக்குள் பல்வேறு நடவடிக்கைகளுக்கு கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தியுள்ளனர்.

இதன்படி சிறைச்சாலைகள் ஆணையாளரின் உத்தரவுக்கமைய மாத்தறை சிறைச்சாலைக்கு தண்டனையின் நிமித்தம் அழைத்து வரப்படுகின்றவர்கள், அங்குனுகொலபலஸ்ஸ சிறைச்சாலைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

அத்துடன் சுகாதார பரிந்துரைகளை கடைபிடிக்கும் வகையில், பார்வையாளர் அணுகலை ஒழுங்குபடுத்தவும் கண்காணிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 



Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top