யாழ்ப்பாணம் - கொக்குவில் பிரதேசத்தில் உள்ள பிரபல பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா போதைப்பொருளை விற்பனை செய்த ஆறு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வட்ஸ்அப் மூலம் தொடர்பை ஏற்படுத்தி இவ்வாறு விற்பனையில் ஈடுபட்டு வந்த 6 சந்தேகநபர்களே இன்று (20.12.2023) மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின் பொலிஸ் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் தெய்வனாயகம் மேனன் தலைமையிலான பொலிஸ் குழுவினரால் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
நீதிமன்ற கட்டளை
இவர்களில் இருவரை மூன்று நாட்களுக்கு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்ற கட்டளை பெறப்பட்டுள்ளது.
அத்துடன் போதைப்பொருள் பாவனையில் ஈடுபடும் மாணவர்களின் விபரங்கள், சந்தேகநபர்களை விசாரணை செய்து பெறப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.