அடுத்த தேர்தலின் ஊடாக ஆட்சி அதிகாரத்தை பெற்றுக்கொள்வதே தமது எதிர்பார்ப்பு என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சிக்கு செல்வதோ அல்லது நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைமையை பெறுவதோ தமது எதிர்பார்ப்பு இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கிரிந்திவெல பகுதியில் ஆரம்பமாக கண்காட்சி நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
கட்சியில் இருந்து விலகியவர்களுக்கு பதிலாக புதியவர்கள் நியமிக்கப்படுவார்கள் எனவும் அதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அந்த விஷயங்கள் ஏற்கனவே செய்யப்பட்டுள்ளன.
போதைப்பொருளால் நாடு அழிந்து வரும் நிலையில், அதனை ஒழிப்பதற்காக தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்துள்ள விசேட நடவடிக்கையை தாம் பாராட்டுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் தேர்தலின் ஊடாக தாம் மீண்டும் ஆட்சி வருவதாக தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமது ஆட்சியில் வரிகளை நீக்குவதற்கு மாறாக மக்களுக்கு நியாயமான வரிகள் முறைமைகள் அறிமுகப்படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.