இலங்கைக்கான இந்திய தூதராக சந்தோஷ் ஜா கடந்த வாரம் பதவி ஏற்றார். மேலும் இந்த நிலையில் நேற்று அவர் இலங்கை பிரதமர் தினேஷ் குணவர்த்தனேவை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இரு நாடுகளுக்கு இடையிலான பொருளாதார உறவுகள் மற்றும் ஒத்துழைப்பு குறித்து இருவரும் விரிவாக விவாதித்தனர்.
அத்தோடு எரிசக்தி துறையில் இந்தியாவின் அதிக முதலீடுகள், திரிகோணமலை எண்ணெய் சேமிப்பு தொட்டிகள், துறைமுகங்கள், ரெயில்வே மற்றும் பிற துறைகளில் முன்மொழியப்பட்ட கூட்டு திட்டங்களை விரைவுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் மற்றும் வழிமுறைகளை ஆய்வு செய்தனர்.