ஹமாஸ் அமைப்பை ஒழிக்கும் வரை போரை தொடர்வோம்: மீண்டும் சூளுரைத்த நெதன்யாகு

keerthi
0



 ஹமாஸ் அமைப்பை ஒழிக்கும் வரை போரை தொடர்வோம் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மீண்டும் சூளுரைத்துள்ளார்.

மேற்கு ஆசிய நாடான இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் உள்ள ஹமாஸ் அமைப்புக்கும் இடையே, கடந்த அக்டோபர் 7 ஆம் திகதி முதல் போர் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், 15 நிரந்தர உறுப்பினர்கள் உடைய ஐ.நா., பாதுகாப்பு அமைப்பினால் தீர்மானம் ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

காசா பகுதியில் உடனடியாக போர் நிறுத்தம் செய்யவும், பிணைக்கைதிகள் அனைவரையும் ஹமாஸ் அமைப்பு உடனடியாக விடுவிக்க வலியுறுத்தியும் ஐ.நா. பாதுகாப்பு அமைப்பு தாக்கல் செய்த தீர்மானத்தை  அமெரிக்கா நிராகரித்தது.

இதையடுத்து தீர்மானம் தோல்வியடைந்தது. இந்நிலையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியிருப்பதாவது, ஐ.நா. பாதுகாப்பு அமைச்சரவை கூட்டத்தில் அமெரிக்கா எடுத்த நிலைப்பாட்டை வரவேற்கிறேன்.

 அத்தோடு போர் நிறுத்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, ஹமாஸ் மீதான தாக்குதலை தீவிரப்படுத்த உள்ளோம்.

மேலும், ஹமாஸ் அமைப்பை ஒழிக்கும் வரை போரை தொடர்வோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top