நடிகை ஜோதிகா தற்போது கொடுத்துள்ள பேட்டி ஒன்றில் தனக்கு நடந்த அனுபவத்தை ஆதங்கத்துடன் வெளிப்படையாக பேசியுள்ளார்.
நடிகை ஜோதிகா
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை ஜோதிகா, சூர்யாவுடன் காதல் ஏற்பட்டு 2004ம் ஆண்டில் அவரை திருமணம் செய்து கொண்டார்.
இந்த நட்சத்திர தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், திருமணத்திற்கு பின்பு நடிப்பிலிருந்து ஒதுங்கியிருந்த இவர் 36 வயதினிலே திரைப்படத்தின் மூலம் இரண்டாவது எண்ட்ரி கொடுத்தார்.
பின்பு பல படங்களில் நடித்த அவர் அண்மையில், காதல் தி கோர் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் குறித்த தனது அனுபவத்தை பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
கேவலமான கேள்வியால் அதிர்ச்சி
அவர் அளித்த பேட்டியில், சுமார் 25 ஆண்டுகளாக சினிமா துறையில் இருக்கும் எனக்கு மிகவும் வருத்தமான விடயம் இருக்கின்றது. அதை இங்கே கண்டிப்பாக சொல்ல வேண்டும்.
சில படங்களில் என்னுடைய கதாபாத்திரத்திற்கு எந்த முக்கியத்துவம் கொடுக்காமல் அதில் தன்னை நடிக்க சொன்னார்கள். இப்படியான படத்திற்கு ஏன் தன்னை அழைக்கின்றீர்கள் என்று பல இயக்குனர்களிடம் கேட்டுள்ளாராம்.
அதுமட்டுமில்லாமல் இத்தனை ஆண்டுகள் சினிமாவில் நடித்த என்னிடம், ஒரு இரண்டு சீன் கொடுங்கள் என்றெல்லாம் கேவலமாக கேட்டார்கள்.
அவர்கள் அந்த இரண்டு மூன்று சீன்கள் நன்றாக இருந்தால் தானே நான் நடிப்பேன்... பெரிய படங்களில் தன்னை அழைப்பதற்கு மதிப்பளித்தாலும்... அதில் எனக்கான சீன் எங்கே? நான் சும்மா கதாநாயகன் பக்கத்தில் நின்று கொண்டு சும்மா செல்ல முடியாது... அவ்வாறான திரைப்படத்தில் தான் அவமதிக்கப்பட்டதாக நினைக்கிறேன் என்று கூறியுள்ளார்.