ஆசிரியரால் மனமுடைந்த உயர்தர மாணவி தற்கொலைக்கு முயற்சி..!

keerthi
0

 



வவுனியா வடக்கு கல்வி வலயத்துக்குட்பட்ட தரணிக்குளம் பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவியை கொடூரமாக தாக்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஆசிரியர் மீது திணைக்கள ரீதியான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


இந்த விவகாரம் பொலிஸ் நிலையம் வரை சென்று, மாணவியின் குடும்பத்தினரால் ஆசிரியருக்கு மன்னிப்பளிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


க.பொ.த உயர்தரத்தில் கல்வ கற்கும் மாணவியொருவரே கொடூரமாக தாக்கப்பட்டுள்ளார்.


இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்தினர் தெரிவிக்கையில்,


“பாதிக்கப்பட்ட மாணவி வகுப்பறையில் இருந்த போது, மற்றொரு மாணவியின் மூலம் ஆசிரியர் அழைத்துள்ளார். ஆசிரியர் அறைக்கு சென்ற போது, அங்கு குறிப்பிட்ட ஆசிரியர் செஸ் விளையாட்டிக் கொண்டிருந்துள்ளார். சிறிது நேரம் இருக்கும்படி ஆசிரியர் கூறியுள்ளார். ஏன் அழைத்தீர்கள் என மாணவி கேட்க, என்னைப்பற்றி என்ன கதைத்தாய் என ஆசிரியர் கேட்டுள்ளார். தான் அப்படியொன்றும் கதைக்கவில்லை, நீங்கள் சொன்னால்தான் என்ன விடயமென தெரியும் என மாணவி கூறியுள்ளார். 


என்ன எதிர்த்து கதைக்கிறாய் என திடீரென மாணவியை தாக்க ஆரம்பித்துள்ளார். பனம் மட்டையினால் மாணவியை தாக்கியுள்ளார். பனை மட்டை முறிந்ததும், மூங்கில் தடி வெட்டி வருமாறு மாணவர்களுக்கு பணித்துள்ளார். பச்சை மூங்கில் தடி வெட்டிக் கொண்டு வந்ததை கண்டதும், மாணவி பயத்துடன் அறை கதவை திறந்து கொண்டு தப்பியோடினார். 


ஆசிரியை ஒருவரை கட்டிப்பிடித்து உதவி கோரியுள்ளார். தாக்கிய ஆசிரியர் விரட்டிச் சென்று, அந்த ஆசிரியையும் பேசிவிட்டு, மாணவியை பிடித்து இழுத்துக் கொண்டு அறைக்குள் சென்றுள்ளார். சக மாணவிகள் நியாயம் கேட்டபோது, அவர்களையும் பேசி அனுப்பியுள்ளார். மீண்டும் அடிக்க முயன்றபோது, அந்த அறையிலிருந்து தப்பியோடி வந்து விட்டார்.


 அத்தோடு  மாணவி வீட்டுக்கு வந்து அறையை பூட்டி விட்டு, தான் தற்கொலை செய்யப் போவதாக கதறி அழுதார். நாங்கள் கோயிலுக்கு சென்று விட்டோம். உறவினர்கள் தகவல் தந்த பின்னரே வீட்டுக்கு சென்றோம்.


சிறுவர் நன்னடத்தை பிரிவுக்கு அறிவித்து, அவர்களின் அறிவுறுத்தலின்படி பொலிஸ் நிலையம் சென்றோம். பொலிசார் பரிசோதித்து மாணவியின் முதுகில் அடி காய தழும்புகள் இருப்பதை கண்டறிந்தனர்.


இந்நிலையில் குறித்த ஆசிரியருக்கு விசாரணை முடியும் வரை இடமாற்றம் வழங்கப்பட்ட நிலையில் தனக்கு பிரியாவிடை வைக்குமாறு குறித்த ஆசிரியர் பாடசாலை நிர்வாகத்திற்கு வெளி நபர்கள் ஊடாக அழுத்தம் வழங்குவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.


இவ்வாறான நிலையில் பச்சை மட்டையால் அடி வாங்கிய உயர்தர மாணவி தொடர்பில் தவறான கருத்துக்களை குறித்த ஆசிரியர் பரப்புவதால் குறித்த மாணவி நேற்று வியாழக்கிழமை இரவு தற்கொலைக்கு முயற்சி செய்த நிலையில் வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top