பாலஸ்தீனத்தில் இன்குபேட்டரில் காட்சியளிக்கும் குழந்தை இயேசு

keerthi
0

 


இன்குபேட்டரில் காட்சியளிக்கும் குழந்தை இயேசுவின் சிலையின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் அதிக அளவில் பகிரப்படுகின்றன.

குறித்த குழந்தை இயேசுவின் சிலையானது பெத்லஹேம் தேவாலயத்தின் முன்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.



பாலஸ்தீன நாட்டு கலைஞர் ராணா பிஷாரா என்பவர் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக குழந்தை இயேசுவின் சிலையைப் பயன்படுத்தி ஒரு புதிய கலைப்படைப்பை உருவாக்கியுள்ளார்.

இஸ்ரேலிய படைகளின் வான்வழித் தாக்குதல்களுக்கு நடுவே மருத்துவமனைகளில் குறைப்பிரசவமான குழந்தைகள் இன்குபேட்டர்களுக்காக எகிப்தில் உள்ள மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்படும் நிலை காணப்படுகின்றது.

அந்தவகையில், இன்குபேட்டரில் குழந்தை இயேசு வைக்கப்பட்டுள்ளதை காட்டும் கலைப் படைப்பை காட்சிப்படுத்தியுள்ளார்.  

பலஸ்தீனத்தை சேர்ந்த கலைஞரான ராணாபிஷாரா தனது கலைப்படைப்பு குறித்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில்,



இஸ்ரேலிய படைகளின் தாக்குதல்களால் பாலஸ்தீனத்தில் குழந்தைகள் உயிரிழந்துள்ளமை குறித்து ஆழ்ந்த கவலை அடைந்துள்ளதாகவும், இன்று குழந்தை இயேசு பிறந்தால்  அவர் ஒரு போர் மோதலின் நடுவில் பிறப்பார் என்றும் தெரிவித்துள்ளார்.



Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top