யாழில் கடற்றொழிலாளர்கள் கையெழுத்து போராட்டம்!

Janu
0

இலங்கை கடல் தொழிலாளர்களின் நிலைப்பாடு என்னும் தலைப்பில் 5  கோரிகைகளை முன்வைத்து கடல் தொழிலாளர்கள் கையெழுத்து போராட்டம் ஒன்றை யாழ்ப்பாணத்தில் இன்று முன்னெடுத்துள்ளனர்.


  யாழ் - மன்னாாில் கையெழுத்து போராட்டம் - Global Tamil News

 வரைவு கடற்றொழில் சட்டத்தை நிராகரிப்பதாகவும்  ,
இலங்கை கடற்பரப்பில் வெளிநாட்டு கடற்றொழில் கப்பல்களுக்கு அனுமதிப்பத்திரம் வழங்குவதை முற்றுமுழுதாக எதிர்கின்றோம்,எனவும் கூறுகின்ற போராட்டகாரர்கள்

மேலும் சில விடையங்களை முன்வைத்துள்ளனர் அதாவது

கடல் உணவு இறக்குமதியால் உள்ளுர் கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால் கடல் உணவு இறக்குமதியை எதிர்க்கின்றோம்,

கடற்றொழில் சமூகத்திற்கு 2024க்கான பாதீட்டில் போதிய ஒதுக்கீடு இன்மையையும் பொருத்தமற்ற அரச கொள்கைகளையும் மாற்றியமைத்து கடற்றொழில் வாழ்வாதாரங்களை மீளக்கட்டியெழுப்ப வேண்டும் என்று கூறுகின்றோம்,

கடந்த பல வருடங்களாக இந்திய இழுவைமடி படகுகளால் பாதிக்கப்பட்டுவரும் வட-இலங்கை கடற்றொழில் சமூகங்களுக்கும் நியாயமான தீர்வுகளை முன்னெடுக்குமாறு கூறுகின்றோம் -

என்ற ஐந்து அம்சக்கோரிக்கைகளை முன்வைத்தே மேற்படி கையெழுத்து போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.

   


மேலும்  எமது சமூகத்துக்கு விடிவு வழங்குமாறு கேட்டு குறித்த கையெழுத்து அடங்கிய மகஜரை ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக   போராட்டத்தில் ஈடுபட்ட கடல் தொழிலமைப்புக்களின்  பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்  

  

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top