எம்பிலிபிட்டி சிறைச்சாலை கைதி ஒருவர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிறைச்சாலை அதிகாரிகளிடமிருந்து தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று (20.12.2023) இடம்பெற்றுள்ளது.
தப்பியோடிய சிறைக்கைதி எம்பிலிப்பிட்டி பிரதேசத்தை சேர்ந்த 25 வயதுடைய நபரென கூறப்படுகிறது.
அபராதத் தொகை
இவர் 250 மில்லிகிராம் நிறையுடைய ஹெரோயின் போதைப்பொருளுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நிலையில் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் 10,000 ரூபா அபராதம் செலுத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அபராதத் தொகையை செலுத்த முடியாததால் இவரை எம்பிலிப்பிட்டி சிறைச்சாலையில் எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறையியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் இவர் சுகயீனம் காரணமாக எம்பிலிபிட்டிய பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதே சிறைச்சாலை அதிகாரிகளிடமிருந்து தப்பிச்சென்றுள்ளார்.
மேலும், தப்பிச் சென்ற கைதியை தேடும் பணியில் சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் எம்பிலிபிட்டி பொலிஸார் தீவிரமாக செயற்பட்டு வருகின்றனர்.