வற் அமுல்படுத்தப்பட்டாலும் எரிபொருளுக்கான துறைமுகம் மற்றும் விமான நிலைய வரி நீக்கப்படும் என நிதியமைச்சின் வரி கொள்கை ஆலோசகர் தனுஜா பெரேரா தெரிவித்துள்ளார்.
இதனால், எரிபொருள் மீதான 7.5% துறைமுகம் மற்றும் விமான நிலைய வரி நீக்கப்பட்டு, எரிபொருளுக்கு 10.5% வரி மட்டுமே விதிக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.
இதன்படி, 92 ஒக்டேன் 92 பெற்றோலின் விலை 40 ரூபாயினாலும், 95 ஒக்டேன் பெற்றோலின் விலை 35 ரூபாயினாலும் அதிகரிக்குமென எதிர்பார்க்கலாம்.
டீசல் லீட்டர் ஒன்றின் விலை 40 ரூபாயினாலும், சுப்பர் டீசல் லீட்டர் ஒன்றின் விலை 25 ரூபாயினாலும் அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.