யாழ்ப்பாணம் - துன்னாலை குடவத்தை பகுதியில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டதுடன் சந்தேக நபரிடமிருந்து போதைப்பொருளுடன் பெருந்தொகை பணம் மற்றும் பெருமளவான தொலைபேசிகளும் மீட்கப்பட்டுள்ளது.
43 வயதான குறித்த பெண் நெல்லியடிப் பொலிஸாரால் நேற்றைய தினம் (21) கைதுசெய்யப்பட்டார்.
இதன்போது, 620 மில்லி கிராம் அளவுள்ள ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளதுடன் 678,900 ரூபா பணமும் 16 கையடக்க தொலைபேசிகளும் சந்தேக நபரிடம் இருந்து கைப்பற்றப்பட்டது.
குறித்த பணம் போதைப்பொருள் விற்பனை மூலம் கிடைத்திருக்கலாமென பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
சந்தேகநபரை பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.