யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு உடுத்துறை பகுதியில் தெப்பம் ஒன்று இன்று கரையொதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த தெப்பம் பௌத்த கொடிகளுடன் கரையொதுங்கியுள்ளதாக கூறப்படும் நிலையில் அத் தெப்பம் மிகவும் அலங்கரிக்கபப்ட்ட நிலையில் கரையுதுங்கியுள்ளது.
இது மியன்மார் நாட்டில் திருவிழா நிகழ்வுகளில் பயன்படுத்துவதற்காக வடிவமைப்படும் இரதம் என கூறப்படுகிறது.
இது சமய சம்பிரதாய நிகழ்வுகளில் பயன்படுத்துவதற்காக வடிவமைப்படும் இரதம் என கூறப்படுகிறது.
இருப்பினும் இது எவ்வாறு வந்தது, இது உண்மையிலேயே என்ன என்ற விடயங்கள் இதுவரை வெளியாகவில்லை.
இந்நிலையில் அந்த தெப்பம் எங்கு வந்தது என்பது தொடர்பில் தெரியவராத நிலையில் கரைக்கு வந்த தெப்பத்தால் மக்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.
கடந்த வருடம் இந்தியாவின் ஆந்திர மாநிலத்தின் கடற்கரையில் இதையொத்த மர்மமான தங்க நிற தேர் கரை ஒதுங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.