கனடா அரசு நாட்டு மக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை

keerthi
0

 


கனடாவில் சளிக்காய்ச்சல் குறித்து மத்திய சுகாதார அலுவலகம் எச்சரிக்கை வெளியிட்டுள்ளது.

அண்மைய நாட்களில் சளிக்காய்ச்சல் தொற்று வேகமாக பதிவாகி வருவதாக ரொறன்ரோ மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன்இ கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் சளிக்காய்ச்சல் 5 சதவிகிதத்தால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நோய்த் தொற்று பரவுகையை தடுக்கவும், நோய்த் தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ளவும் தடுப்பூசி பெற்றுக்கொள்ள வேண்டுமென மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


எனவே, தடுப்பூசி போட்டுக்கொள்ள திட்டமிட்டுள்ள நபர்களுக்கு இது சரியான நேரம் என மருத்துவர் Allison McGeer தெரிவித்துள்ளார்.

மாகாணத்திற்கு மாகாணம் சளிக்காய்ச்சல் தொற்றாளர் எண்ணிக்கை மாறுபட்ட அளவில் காணப்படுவதாக கனடிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

எவ்வாறெனினும் கூடிய விரைவில் தடுப்பூசி ஏற்றிக் கொள்வது ஆபத்துக்களை தவிர்க்க உதவும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.



Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top