இலங்கையில் சொந்தமாக ஹோட்டல் வாங்கி விருந்து வைத்த வெளிநாட்டவருக்கு நேர்ந்த கதி

keerthi
0

 


அஹங்கம பிரதேசத்தில் சுற்றுலா ஹோட்டல் ஒன்றினை வைத்திருக்கும் அவுஸ்திரேலிய பிரஜை ஒருவர் சிலரால் தாக்கப்பட்டுள்ளார். 

 அவர் தற்போது கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், தாக்குதல் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்ட போதிலும், அவர்களை பின்னர் விடுவிக்க அஹங்கம பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். 

 கடந்த 2ஆம் திகதி இரவு காலி அஹங்கம பிரதேசத்தில் உள்ள சுற்றுலா ஹோட்டல் ஒன்றில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

 ஹோட்டலின் உரிமையாளரான மார்க் வில்லியம்ஸ் என்ற 57 வயதுடைய அவுஸ்திரேலிய நபரே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளார்.

அத்தோடு   மூன்றரை ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த இந்த ஹோட்டலை கொள்வனவு செய்வர் கடந்த 2ம் திகதி இரவு மீண்டும் திறப்பு விழா நடத்தியுள்ளார். 

 இதில் ஏராளமான வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் கலந்து கொண்டனர். ஆனால், இந்த ஹோட்டலுக்கு அடுத்த இடத்தில் வேறு விருந்து நடத்திக் கொண்டிருந்த சுமார் 15 பேர் கொண்ட கும்பல் ஹோட்டலுக்கு வந்து நிகழ்ச்சியை நிறுத்துமாறு மிரட்டியுள்ளனர். 

இவ்  ஹோட்டலின் உரிமையாளரான வெளிநாட்டவர் இது குறித்து விசாரிக்க வந்தபோது, ​​கும்பல் அவரைத் தாக்கியுள்ளது. 

இத்    தாக்குதலில் காயமடைந்த அவர் தற்போது கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். அஹங்கம பொலிஸார் தாக்குதல் தொடர்பில் மூவரை கைது செய்து பின்னர் விடுவித்துள்ளனர்.



Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top