மதுபானசாலையை ஆரம்பிப்பதற்கு ஆரம்ப கட்டணமாக ஒரு கோடி ரூபாவை வைப்பிலிட வேண்டும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார். மதுபானசாலையை திறப்பதற்கு இதுவரையில் இத்தகைய அடிப்படைக் கட்டணம் எதுவும் அறவிடப்படவில்லை. மிகவும் சட்டபூர்வமான முறையில் மதுவரி உரிமம் வழங்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், B4 உரிமத்திற்கு அதிக தேவை இருப்பதால், அந்த உரிமம் வழங்குவதற்கு அடிப்படைக் கட்டணமாக ஒரு கோடி ரூபாவை வைப்பிலிடவேண்டுமெனவும் அவர் தெரிவித்தார். சுற்றுலாத்துறையுடன் இணைந்து உரிமம் வழங்கும் திட்டத்தை விரிவுபடுத்த நம்புவதாகத் தெரிவித்த அவர், நாட்டின் பொது மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள வரிச்சுமையை படிப்படியாகக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
மதுபானசாலையை ஆரம்பிக்க ரூ. 1 கோடி வைப்பிலிடல் அவசியம்..!!
January 09, 2024
0
Tags
Share to other apps