கலிபோர்னியா மாநிலத்தை சேர்ந்த 33 வயதான பெண் பிரின் ஸ்பெசர் (Bryn Spejcher).
பிரின், "அக்கவுன்டன்ட்" பணியில் இருந்த சாட் ஒமேலியா (Chad O'Melia) எனும் 26-வயது ஆண் நண்பரை அடிக்கடி சந்தித்து வந்தார்.
பிரின் போதை மருந்து உட்கொள்ளும் பழக்கம் உள்ளவர்.
2018 மே மாதம், தனது ஆண் நண்பர் ஒமேலியாவை சந்திக்க பிரின் சென்றார். அப்போது பிரின் மரிஜுவானா எனும் போதை பொருளை பயன்படுத்தினார். அதில் அவர் தனது சுயகட்டுப்பாட்டை இழந்தார்.
அந்நிலையில் அவருக்கும் ஒமேலியாவிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
கோபத்திலும், போதை மருந்தின் மயக்கத்திலும், என்ன செய்கிறோம் என்பதை அறியாத பிரின், ஒமேலியாவை ஒரு கத்தியால் 108 முறை கத்தியால் குத்தினார். இதில் அந்த இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார் ஒமேலியா.
தகவல் தெரிவிக்கப்பட்டு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போது உடல் முழுவதும் ரத்தத்துடன், கையில் கத்தியை பிடித்தவாறு, அழுது கொண்டே இருந்தார் பிரின்.
மேலும் காவல்துறையினர் அவரை பிடிக்க முற்பட்ட போது தனது கையில் இருந்த கத்தியால் தன் கழுத்தில் குத்தி தற்கொலைக்கு முயன்றார். உடனடியாக காவல் அதிகாரிகள் அவரை காப்பாற்றி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
ஒமேலியாவை மட்டுமின்றி தனது நாயையும் குத்தி கொன்றார், பிரின் என்பதை காவல்துறையினர் கண்டுபிடித்தனர்.