பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான் கான், பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாப் (பிடிஐ) கட்சித் தலைவராக உள்ளார். 71 வயதான இம்ரான் கான், 2018 முதல் ஏப்ரல் 2022, வரையிலான காலகட்டத்தில் பாகிஸ்தானின் பிரதமராக பதவி வகித்தார்.
இந்நிலையில் அவர் மீது, அரசு ரகசியங்களை கசியவிட்ட குற்றச்சாட்டு உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன. அரசு ரகசியங்களை கசியவிட்ட குற்றச்சாட்டில் கடந்த மாதம் இம்ரானுக்கு நீதிமன்றம் பிணை வழங்கியிருந்தது
இந்த வழக்கில் செவ்வாய்க்கிழமை (300 இம்ரான் கான் மற்றும் அவரது தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சியின் துணை தலைவர் குரேஷிக்கும் தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அந்நாட்டின் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஏற்கனவே பரிசுப்பொருள் வழக்கில் விதிக்கப்பட்ட 3 ஆண்டுகள் சிறைக்கு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.