பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சினால் ஸ்தாபிக்கப்பட்ட 118 தொலைபேசி இலக்கத்திற்கு கிடைக்கக்கூடிய தகவல்கள் குறித்து மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
இதன்மூலம், தேசிய பாதுகாப்பிற்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அச்சுறுத்தல் ஏற்படுத்தக்கூடிய பயங்கரவாத மற்றும் தீவிரவாத செயற்பாடுகளையும் இந்த இலக்கத்திற்கு வழங்க முடியும் என தெரிவித்துள்ளார்.
இவை சார்ந்த முறைப்பாடுகள் தனிக் குழுவின் கீழ் கண்காணிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், பொய்யான தகவல்களை வழங்கும் நபர்களுக்கு எதிராக சட்டம் அமுல்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார்