தென் கொரியா பாப் இசை சினிமாவை கண்டு களித்த 16 வயதான இரண்டு சிறுவர்கள் தண்டிக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வடகொரியா மக்கள் தென் கொரியா மக்களுடன் எந்த வகையில் தொடர்பு ஏற்படுத்தினாலும் சொந்த நாட்டு மக்களுக்கே தண்டனை வழங்கும் கொடூரம் சமீப காலமாக நிலவி வருகிறது
அந்நாட்டு ஜனாதிபதியாக இருக்கும் கிம் ஜோங் உத்தரவில் தான் இது தொடர்வதாக கூறப்படுகிறது. வடகொரியாவில் தென்கொரியா நாடகங்களை பார்க்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த தடையை மீறி தென் கொரியா நாட்டின் பாப் இசை சினிமாவை பார்த்த 2 பள்ளி சிறுவர்களுக்கு 12 ஆண்டுகள் கடும் வேலை செய்யும் தண்டனையை வடகொரியா அரசு வழங்கியுள்ளது.