பெண்களை கர்ப்பமாக்கினால் 13 இலட்சம் ரூபாய்..!!

tubetamil
0

 இந்தியாவில், பெண்களை கர்ப்பமுறச் செய்தால் 13 இலட்சம் ரூபாய் வழங்கப்படும் என்ற மோசடி விளம்பரத்தை நம்பி ஆண்கள் பலர் பணத்தை இழந்துள்ளனர்.


பீகாரைச் சேர்ந்த மங்கேஷ் குமார், முகப்புத்தகத்தை பார்த்துக்கொண்டிருக்கும்போது, ’அனைத்திந்திய கர்ப்பமுறச்செய்யும் பணி சேவை’ என்ற நிறுவனம் வெளியிட்டதாகக் கூறும் ஒரு காணொளி அவர் கண்ணில் பட்டுள்ளது.

இலட்சக்கணக்கில் சம்பளம் வழங்கும் இந்த பணியில் இணைய விரும்பினால், கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும் என அந்த காணொளி கூற அந்த லிங்கை கிளிக் செய்துள்ளார்.

சிறிது நேரத்தில், அவருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது.

அவருடன் பேசிய நபர், தன் பெயர் சந்தீப் என்று கூறி தன்னை அறிமுகம் செய்துகொண்டுள்ளார்.

ஒரு பெண்ணுடன் பாலுறவு கொண்டால், 5 இலட்சம் ரூபாய் கிடைக்கும் என்றும், அந்தப் பெண் கர்ப்பமுற்றால், கூடுதலாக 8 இலட்சம் ரூபாய் கிடைக்கும் என்றும் கூறியுள்ளார் சந்தீப்.

பண ஆசையும் சபலமும் ஒன்று சேர, குமார் சம்மதம் தெரிவிக்க, அந்தப் பணிக்கான பதிவுக்கட்டணமாக 799 ரூபாய் செலுத்தவேண்டுமென சந்தீப் கூற, உடனடியாக பணம் செலுத்தியுள்ளார் குமார்.

சில பெண்களின் படத்தை அனுப்பி, இதில் நீங்கள் எந்தப் பெண்ணை கர்ப்பமாக்க விரும்புகிறீர்கள் என்பதை முடிவு செய்யலாம் என சந்தீப் கூற, அடுத்த சில வாரங்களில் மனைவிக்குத் தெரியாமல் குமார், சந்தீப்புக்கு நீதிமன்ற ஆவணங்களுக்கு, டெபாசிட்டுக்காக, சேவை வரி என மொத்தம் 16,000 ரூபாய் செலுத்தியுள்ளார்.


குமார் வாழும் அதே நகரில், ஒரு உணவகத்தில் அறை முன்பதிவு செய்துள்ளதாகவும், அங்குதான் குமார் அந்தப் பெண்ணை சந்திக்கவேண்டும் என்றும் சந்தீப்புடைய சக அலுவலர்கள் கூற, கனவில் மிதந்திருக்கிறார் குமார்.

ஒரு கட்டத்தில், தனக்குக் கொடுப்பதாக வாக்களித்த 5 இலட்சம் ரூபாயைக் கேட்டிருக்கிறார் குமார். அதற்கு சந்தீப், தான் குமாரின் வங்கிக்கணக்கில் 512,000 ரூபாய் செலுத்தியுள்ளதாகக் கூறி, அதற்கு ஒரு ரசீதையும் அனுப்பி, வருமான வரியாக 12,600 ரூபாய் செலுத்தினால், அந்த பணம் குமாருக்குக் கிடைக்கும் என கூறியுள்ளார்.

ஆனால், இதற்கு மேல் கொடுக்க என்னிடம் பணம் இல்லை என்று குமார் கூற, உடனே சந்தீப்பின் பேச்சின் தோரணை மாறியுள்ளது.

உங்கள் கணக்கில் திடீரென 5 இலட்சம் ரூபாய் வந்துள்ளதால், வருமான வரித்துறையினர் உங்கள் வீட்டுக்கு சோதணைக்கு வரப்போகிறார்கள், நீங்கள் கைது செய்யப்படுவீர்கள் என்று கூற, பயந்துபோய் சில நாட்களுக்கு தனது தெலைபேசியை அணைத்து வைத்துள்ளார் குமார்.

குமார் உட்பட சிலர் இந்த மோசடிக் குறித்து காவல்துறையினருக்கு தகவலளிக்க, காவல்துறை விசாரணையில், குமாரைப் போல பலர் இந்த மோசடியில் சிக்கியுள்ளதும், வெளியே தெரிந்தால் அவமானம் என அஞ்சி பலர் காவல்துறையிடம் புகாரளிக்காமல் விட்டுவிட்டதும் தெரியவந்துள்ளது.

காவல்துறையினர் இந்த மோசடி தொடர்பாக 9 பேரைக் கைது செய்துள்ளதுடன், மேலும் 18 பேரைத் தேடிவருகிறார்கள்.

இவ்வளவு நடந்த பின்பும், குமாரை உணவகத்தில் சந்திப்பதாகக் கூறிய பெண், மீண்டும் அவரை அழைத்து, சந்தீப் எல்லாரையும் ஏமாற்றிவிட்டதாகவும், இப்போதும் 3,000 ரூபாய் வரி செலுத்தினால், 90,000 ரூபாயாவது கிடைக்கும் என்றும் கூற, தனக்கு ஒரு மாத சம்பளமே 15,000 ரூபாய்தான் என்றும், தான் கொடுத்த பணத்தில் 10,000 ரூபாயையாவது திருப்பிக் கொடுங்கள் என்றும் கெஞ்சியிருக்கிறார் குமார்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top